Friday, December 17, 2010

கழலும் டவுசர்கள். கலக்கும் சிபிஐ

சிபிஐ நடத்தும் ரெய்டுகளால் பலரது டவுசர்கள் கழற்றப் பட்டு வருகின்றன.   அவ்வகையில் நேற்று கழற்றப் பட்ட முக்கியமான இரண்டு டவுசர்கள் யாருடையது தெரியுமா ?

முதல் டவுசர் குருமா ராஜ் மற்றும் இரண்டாவது டவுசர் போலிப் பாதிரி ஜகத் கஸ்பர்.

இந்தப் போலிப் பாதிரியின் முகத்திரையை  ஜுலை மாதமே கிழித்தது.   அந்தப் பதிவு,  வாசகர்களுக்காக மீண்டும் தனியாக மறு பதிவு செய்யப் படுகிறது.

கடந்த மாதம், ஆ.ராசாவுக்கு ஆதரவாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய போலிப் பாதிரி பேசியதை சற்றே நினைவு படுத்திப் பார்ப்போம்.
 1

காவல்துறை அதிகாரிகளால் அழைத்து வரப்படும் காமராஜ்
‘இந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் என்று கூறினார்.   ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார்.   ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான்.   ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள்.   இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும்.   ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ? அது போலத்தான் இதுவும் என்றார்.   (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.
 IMG_9392

தப்ப முயற்சி செய்து பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய கஸ்பர்.
இதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது.   ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம்.   அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம்.   பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)

IMG_9399
இப்படி புயல் போல முழங்கிய பாதிரியை நேற்று சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக, விசாரணையில் துளைத்து எடுத்தனர்.   பாதிரி பதட்டமில்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், பதட்டத்தில் கைகளை மேசையில் தட்டியபடி இருந்தார். பாதிரியின் தமிழ் மையம் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. 12 மணி நேரம் சோதனை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறியதும் பாதிரி அலுவலகத்தின் பணியாளர்கள் மட்டும் வெளியேறினர். வெளியே பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் காரர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்த பாதிரி, விளக்கை அணைத்து விட்டு இருட்டறையில் அமர்ந்திருந்தார். பாதிரியின் உதவியாளர்கள், வெளியே வந்து புகைப்படக் காரர்கள் போய் விட்டார்களா இல்லையா என்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக, 1 மணி நேரம் கழித்து, பாதிரி திருடன் போலவே அவசர அவசரமாக வெளியேறினார். பத்திரிக்கையாளர்கள் மடக்கி கேள்வி கேட்டதும், சிபிஐ அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள் என்றார் (உங்ககிட்ட அவங்க சர்ட்டிபிக்கேட் கேட்டாங்களா ?) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். (குடுக்கலன்னா, கைது செய்து ஒத்துழைப்பை வாங்கியிருப்பார்கள்.) இப்படி ஒரு மணி நேரம் ஒளிந்திருந்து திருடன் போல வெளியேறிய போலிப் பாதிரி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். ஏன் அவரை சிபிஐ ரெய்டு செய்தது என்று அவருக்குத் தெரியாதாம்.   கணக்கு வழக்குகள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதாம். போலிப் பாதிரியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் பிசினாரிப் பாதிரி, கொரியர் சர்வீசுக்குக் கூட பணம் பாக்கி வைத்திருக்கிறார். நேற்று சோதனை நடந்து கொண்டிருந்த போது, கொரியர் பையன் வந்தான். அவன் வந்த உடன், சார் கொரியருக்கு 2000 ரூபாய் பாக்கி என்று கத்தினான். இங்கே ரெய்டு நடக்குது போயிட்டு அப்புறம் வாப்பா என்று உள்ளிருந்து குரல் வந்தது. அப்போது அங்கிருந்த தொலைக்காட்சி கேமரா மேன், அந்த கொரியர் பையனிடம் பேட்டி எடுக்க முயன்றார்.   இது தெரிந்ததும், அவசர அவசரமாக ஷட்டரை திறந்து 2000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்.
IMG_9400

இவ்ளோ துட்டு அடிச்கீங்களா பாதர்

இன்று நிருபர்களை சந்திக்கும் போது, கஸ்பர் சொன்னது, தமிழ் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும் வைத்திருக்கிறாராம்.   ஒரு கோடி ரூபாய் வைத்திருக்கும் நபர், கொரியர் பையனுக்கு பாக்கி வைத்திருக்கும் அவலத்தை பார்த்தீர்களா ?

கஸ்பர் அலுவலகத்துக்கு கீழே, கஸ்பர் ஆண்டுதோறும் நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான விளம்பரம் வைக்கப் பட்டிருந்தது.   அதில் இருந்த வாசகமான RUN என்பது போலவே, கஸ்பர் ஓடியது சிறப்பான விஷயம்.
IMG_9364

அடுத்தது நம்ப குருமாராஜ். இவரைப் பற்றி ஜுன் மாதம் எழுதிய பதிவையும் சவுக்கு தனியே மீள் பதிவு செய்யப் படுகிறது. ஒரு மனிதன் ஊழல் செய்து ஊரே அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த மனிதர் ஊழல் செய்யவில்லை, அவர் தலித் என்பதால் ஊடகங்கள் அவரை தாக்குகின்றன என்று அனைத்து நாளேடுகளிலும் விளம்பரம் கொடுத்து, ஒரு கருத்தரங்கத்தை முன்னின்று நடத்துகிறார் என்றால் இந்த குருமாராஜ் எப்படிப் பட்ட மனிதராக இருப்பார் ?
IMG_9359
சிபிஐ அதிகாரிகளால் வங்கிக்கு அழைத்துச் செல்லப் படும் காமராஜ்
சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணிக்கே வந்து காமராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே நுழைந்த அதிகாரிகள், வீட்டில் இருந்த காமராஜ் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை அணைத்து தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டனர். காலை 9.30 மணி முதல் அனைத்து செய்தியாளர்களும், காமராஜ் வீட்டில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
மாலையில் 3.30 மணியளவில், காமராஜை அவரது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக் கிளைக்கு அழைத்துச் சென்ற சிபிஐ, அவரது லாக்கரை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஒரு பெரும் தொகை கைப்பற்றப் பட்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் கூறுகின்றன.
காமராஜ் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் 11 வங்கிக் கணக்குகளை முடக்கிய சிபிஐ அதிகாரிகள், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி காமராஜை திருப்பி அனுப்பினர்.
IMG_9353
காமராஜ் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் ஒரு பகுதி
காமராஜுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் அருண் என்பவர் வந்து சோதனை நடைபெறும் போது காமராஜுக்கு ஆதரவாக இருந்தார். வங்கிக்கும் சென்றார்.
வந்திருந்த பத்திரிக்கையாளர்களின் நக்கீரன் நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைத் தவிர, ஒருவர் கூட, இந்த சோதனையை குறை கூறி பேசவில்லை.   அனைவரும் வரவேற்றனர். மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு இதுதான் மரியாதை காமராஜ். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தோளோடு தோள் நின்று, ஒன்றாக சரக்கடித்து, உயிருக்கு உயிரான உங்கள் தொழில் கூட்டாளி ஜாபர் சேட் தப்பித்து விட்டார் பார்த்தீர்களா ? உங்கள் சோதனைகள் இத்தோடு முடியவில்லை. மேலும் தொடரும். காத்திருங்கள்.
ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கையில் அதை வைத்து காசு பார்த்தீர்களே…. காமராஜ்…   கஸ்பர் போன்றதொரு கடைந்தெடுத்த அயோக்கியப் பேர்விழியை வைத்து மறக்க முடியுமா என்று தொடர் போட்டீர்களே… அடுக்குமா… தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரை இலங்கைத் தூதரகத்தில் காசு வாங்கி இலங்கைக்கு அனுப்பி அதை கவர் ஸ்டோரி செய்தீர்களே.   நியாயமா காமராஜ்….. ஈழத் தமிழர்களின் அத்தனை சாபங்களும் உங்களை சுற்றிச் சுற்றி வரும். நீங்கள் எங்கும் ஓட முடியாது..
அடுத்ததாக, பெசன்ட் நகரிலேயே இருந்த ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்த அகிலன் ராமனாதன் என்பவரின் வீடு.
IMG_9345
கல்வித் தந்தை அகிலன் ராமநாதன் வீடு
இந்த நபர் மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்.   மத்தியப் பணியில் இருந்த போது, ஆ.ராசாவின் செயலாளராக இருந்தார்.   (ராசா வனம் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த போது) அப்போது ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையை போட்டதாக தகவல். பிறகு ராசாவோடு கருத்து வேறுபாடாகி, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு கல்வித் தந்தை ஜெகதரட்சகன் கல்லூரியை நிர்வகிக்கிறார்.
சிறிது நாளில், கல்வித் தந்தை ஆவது எவ்வளவு எளிது என்று கண்டுகொண்ட அகிலன், அவரே ஒரு கல்லூரியை தொடங்கி பின்னாளில் அதை நிகர்நிலை பல்கலைகழகமாகவும் மாற்றினார். இவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதைத் தவிர சோதனை நடைபெற்ற இடங்கள்.

1)  க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்
2)  ஈக்வாஸ் எஸ்டேட்ஸ்
3)  கதிர்காமம் பிரைவேட் லிமிட்டெட்
4)  சிவகாமம் ஏஜன்சீஸ்
5)  கோவை ஷெல்டர்ஸ் அன்டு ப்ரமோட்டர்ஸ்
6)  ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
7)  வெல்கம் இந்தியா
8)  எக்சிம் வென்சர்ஸ்
9)  ஜெனெக்ஸ்
10) சாலி தெர்மோ ப்ளாஸ்டிக்ஸ்
11) ஐயப்பா என்டர்பிரைசஸ்
12) ஜேஜி எக்ஸ்போர்ட்ஸ் (மகேஷ் ஜெயின்)
13) ஆண்டிமுத்து கலியபெருமாள்
14) ஆர்.ராமச்சந்திரன்
15) டாக்டர் ராமச்சந்திரன்
16) சின்ன கிருஷ்ணமூர்த்தி
17) அகரம் தெரு சின்ன கிருஷ்ணமூர்த்தி
18) டி.செல்வராஜு
19) சி.சத்யநாராயணன்
20) வளவன்
21) அகமது ஷகீர்
22) முகம்மது ஹசன்
23) மகேஷ் ஜெயின்
24) அலோக் ஜெயின்
இதில் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகிய இருவரும் ஹவாலா தரகர்கள்.
சிபிஐ சோதனைகளில் மிகத் தாமதமாக நடைபெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் குறை சொன்னாலும், ஹோம் வொர்க்கை சரியாக செய்து, ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்தியதன் மூலம், சிபிஐ இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாகவே சவுக்கு உணர்கிறது.
சிபிஐ நிறுவனத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது. சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவிய ஜாபர் என்னென்ன செய்தார் என்ற விபரங்களை விரைவில் வெளியிடும்.

Thursday, December 16, 2010

பெங்களூரில் புதுமணப் பெண் கொலை-தற்கொலைக்கு முயன்ற கொலையாளி சிக்கினான்

சென்னை: பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த புது மணப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயசெல்வனின் மகள் மலர்விழிக்கு (24) விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

பாலசுப்பிரமணியம் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுவதால் மனைவி மலர்விழியுடன் மைக்கோ லே அவுட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்.

கடந்த 11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி, கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

விசாரணையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த நவீன் (25) என்ற வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் நவீனும் மலர்விழியும் உறவினர்கள்.

மலர்விழியை திருமணம் செய்ய அவர் விரும்பியதாகவும் ஆனால் இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து நவீன் தான் மலர்விழியை கொலை செய்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நவீனை பிடிக்க பெங்களூர் போலீசார் பல தனிப் படைகளை அமைத்தனர். இதனால் நவீன் தலைமறைவானார்.

இந் நிலையில் நேற்று சென்னை மாம்பலம் போலீசாருக்கு தியாகராய நகர் மேன்சன் ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தங்களின் மேன்சனில் தங்கியிருக்கும் ஒரு வாலிபர் மயங்கிக் கிடப்பதாக தகவல் தரப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஒரு மருந்தை அதிக அளவில் குடித்து மயங்கியது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

உரிய சிகிச்சை அளித்து அவரை மருத்துவர்கள் தெளிய வைத்தனர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர், பெங்களூரில் மலர்விழி கொலை வழக்கில் தேடப்படும் நவீன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நவீன் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
மலர்விழியும் நானும் காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய மலர்விழி ஏமாற்றிவிட்டார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

கடந்த 11ம் தேதி மலர்விழி தனியாக இருந்தபோது வீட்டுக்குச் சென்றேன். என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டேன். காதலித்து ஏமாற்றியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்தியால் குத்தி மலர்விழியை கொலை செய்தேன்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து தலைமறைவாக இருந்தேன்.எனது தாய்- தந்தையை பெங்களூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார்.

நவீன் கைது குறித்து பெங்களூர் மைகோ லேஅவுட் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்தனர்.

இன்று நவீனை அவர்கள் பெங்களூர் அழைத்துச் செல்கின்றனர்.

முன்னாள் எம்.ஏல்.ஏ. தம்பி கொலை வழக்கு-மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை!!

விளாத்திகுளம்: விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ [^] தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமரகுருபர ராமநாதன். இவரது தம்பி ராஜராஜன் (42). நிலக்கிழாரான இவர் அப் பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்தார்.

இவரது வீட்டில் அதே ஊரை சேர்ந்த கமால் என்பவரது மகன் ஷாஜஹான்(24) என்பவர் சிறு வயது முதலே ராஜராஜன் மனைவியான கிருஷ்ணகுமாரியிடம் டியூசன் கற்று வந்ததோடு, டிராக்டர் டிரைவராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் ஷாஜஹான் கடந்த 21.9.09 அன்று இரவு ராஜராஜனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள தரிசு நிலத்திற்கு சென்றதும் அவரை சரமாரியாக கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும் ரத்தகறை படிந்த அவரது சட்டையை கிருஷ்ணகுமாரியிடம் கொடுத்து துவைத்து தர சொல்லியுள்ளார். அவரும் அதனை துவைத்து கொடுத்துள்ளார்.

இது குறித்து விளாத்திகுளம் போலீசார் கொலைக்கு காரணமான இருவரையும் வழக்கு [^] பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி [^] முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
குற்றவாளிகள் ஷாஜஹான் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் அபராதமும் விதித்தார், மேலும் தடயத்தை மறைக்க முயன்றதற்காக ஷாஜஹானுக்கு மேலும் ஆயிரம் அபராதமும் விதித்து நிதிபதி மேரி அன்சலம் தீர்ப்பு வழங்கினார்.

ஆம்லெட் சண்டை: வாலிபர் குத்தி கொலை-டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கைது!!

குளச்சல்: ஆம்லெட் சாப்பிட்டதற்கு காசு தருவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், குளச்சலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை [^] செய்த டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் குளச்சல் பள்ளிமுக்கு ஆசாத்நகரைச் சேர்ந்தவர் முகமது. இவரது மகன் அல்அமீன். அல்அமீனும், அவரது நண்பர் முகமது இர்ஷாதும் சமையல் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஹோட்டலுக்கு குளச்சல் காலடிவிளையைச் சேர்ந்த யாசின் என்பவரும் சாப்பிட வந்தார்.

டிரைவிங் ஸ்கூல் மாஸ்டரான யாசினுக்கு சமையல் வேலைகளும் தெரியும். ஆகவே அவ்வப்போது சமையல் வேலைகளுக்கும் சென்று வருவார். இதனால் அல்அமீன் மற்றும் முகமது இர்ஷாதுடன் பழக்கம் இருந்து வந்தது. அப்போது தான் சாப்பிட்ட ஆம்லெட்டுக்கு பணம் கொடுத்து விடுமாறு யாசின் கூறினார். ஆனால் அல்அமீனோ மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்களை ஹோட்டல் ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். யாசின் அல்அமீனை மிரட்டிவிட்டு சென்றார்.

உடனே அல்அமீன் யாசினை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த யாசின் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அல்அமீனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்திலேயே இறந்தார். இதைத் தடுத்த முகமது இர்ஷாத்துக்கும் கத்தி குத்து விழுந்தது. படுகாயமடைந்த முகமது இர்ஷாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு குளச்சல் போலீஸ் [^] இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அல்அமீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து யாசினை போலீசார் கைது செய்தனர்

அழகாக இருக்க தேவை இரவில் நல்ல தூக்கம்: ஆய்வு முடிவு

லண்டன்: அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், தினமும் இரவில் ஒழுங்காக தூங்கினாலே போதும்

Movies releasing this week!!

டிசம் : நில் கவனி செல்லாதே
  • 17 டிசம் : ஆட்டநாயகன்

  • 17 டிசம் : ஈசன்

  • 17 டிசம் : வாடா போடா நண்பர்கள்

  • 23 டிசம் : மன்மதன் அம்பு

  • 24 டிசம் : அரிது அரிது

    எம்ஜிஆர் பிறந்தநாளில் மாநாடு-புதுக் கட்சி: விஜய்யின் விறுவிறு அரசியல் மூவ்!!

    சென்னை: பொங்கல் முடிந்த கையோடு ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டும் விஜய், அந்த மாநாட்டிலேயே புதிய கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    நடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தனது புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் ஏழைகளுக்கு பசுமாடுகள், இலவச அரிசி, வேட்டி சேலை என விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டி வருகிறார். மாவட்டங்கள்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    அடுத்த கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை இரு வாரத்துக்கு முன்பு நேரில் அழைத்துப் பேசினார். ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிக்கான வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன.

    மாநாடு நடத்தி புது கட்சியை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பொங்கலையொட்டி ஜனவரி 17-ம் தேதி இந்த மாநாடு நடத்தப்படும் என தெரிகிறது. அன்றுதான் அமரர் எம்ஜிஆர் பிறந்த நாள். பல்வேறு மாவட்டங்கள் மாநாட்டுக்காக பரிலீசிலிக்கப்பட்டன. இறுதியாக திருச்சியில் நடத்த முடிவாகியுள்ளது. மாநாட்டுக்கு அனைத்து ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோரை வரவழைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

    கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து முக்கியஸ்தர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். திராவிட என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் கட்சி பெயரை உருவாக்குகின்றனர். கொடியும் இரு வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மாநாட்டிலேயே கட்சிக்கு தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது பற்றியும் மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.

    விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த பிரச்சாரத்தில் விஜய்யும் இருப்பாரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியுள்ளனர். திருச்சி, கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கணித்துள்ளனர். புதுக்கோட்டையில் எஸ் ஏ சந்திரசேகரன் போட்டியிடுவாராம்.

    சாதிக் பாட்சா அப்ரூவர் ஆகிறார். !!

    வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2010 22:04
    சிபிஐ சோதனையில் சிக்கிய ஆ.ராசாவின் பினாமி, ஆப்ரூவர் ஆகிறார் என்று தெரிகிறது.    சிபிஐ அதிகாரிகள் உங்களுக்கு ஏது இவ்வளவு சொத்து, என்று துருவித் துருவி நடத்திய விசாரணையை தாங்க முடியாமல், தனக்கு குறைவான தண்டனை பெற்றுத் தரும்படியும், அனைத்து விஷயங்களையும் ஒப்புக் கொள்வதாகவும் சாதிக் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.    இன்று காலை முதல் சாதிக்கை விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளிடம், சாதிக் இவ்வாறு கூறி, எப்படியாவது தன்னை அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் படி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

    சாதிக் அப்ரூவர் ஆனால், ஆண்டிமுத்துவின் மகன் ஆட்டம் க்ளோஸ்.  ராசாவின் ஆட்டம் க்ளோசானால், சிஐடி காலனி...... ?   

    நீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு. !!

    குழந்தைகளாக இருக்கையில் நம்மில் பலர் பாடியிருக்கும் பாடல் இது. இதைப் போலத்தான் இன்று ராசாவின் வேஷம் கலைந்தது. இன்று அதிகாலை பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்தியா முழுவதும் சோதனையை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆ.ராசாவின் டெல்லி வீட்டையும் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு மாதம் முன்பாக ஆ.ராசா என்ன பேசினார் என்பதை நினைவுப் படுத்திப் பாருங்கள். There is no question of resigning.   No irregularity in spectrum allocation. Everything was done with Prime Minister’s knowledge. என்னவெல்லாம் பேசினார். இன்று பேச்சு மூச்சில்லாமல், திமுகவில் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற வருத்தத்திலும், குழப்பத்திலும் இருக்கிறார்.

    இன்று சிபிஐ வளையத்தில் ராசாவைத் தவிர, ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.சே.சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை செயலாளர் கே.ஸ்ரீதர், தொலைதொடர்புத் துறை அதிகாரி ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.   மொத்தம் 14 இடங்களில் தொடங்கிய சோதனை இன்று மாலை வரை தொடர்ந்தது.

    சென்னையில் ராசாவின் பினாமியாக கருதப் படும் க்ரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்சின் மேலாண் இயக்குநர் சாதிக் பாட்சா என்பவர் வீட்டிலும் நடந்தது.

    கருணாநிதி ஆ.ராசா சந்திப்பு !!!!

    சனிக்கிழமை, 11 டிசம்பர் 2010 12:57
    சிபிஐ ரெய்டுகளுக்குப் பிறகு, ஆ.ராசா இன்று கருணாநிதியை சந்தித்தார்.  நேற்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை, டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.   இந்த விசாரணை திங்களன்றும் விசாரணை தொடரும் என்று தெரிகிறது.